வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய டி20, ஒருநாள் அணி முழு விவரம் இங்கே.. கேப்டன் யார்?

Nov 22, 2019

மும்பை :

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத உள்ளது.

தேர்வுக் குழு கூட்டத்திற்குப் பின் இந்த தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. வங்கதேச டி20 தொடரில் ஓய்வில் இருந்த கேப்டன் கோலி மீண்டும் அணிக்கு கேப்டனாக திரும்பி உள்ளார்.


டி20 அணி விபரம்

இந்திய டி20 அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், சிவம் துபே, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார்.


ஒருநாள் அணி விபரம்

இந்திய ஒருநாள் போட்டிகள் அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார்.


கேதார் ஜாதவ் நீட்டிப்பு

நீண்ட நாட்களாக பார்ம் அவுட்டாக இருக்கும் கேதார் ஜாதவ் தொடர்ந்து ஒருநாள் அணியில் நீடிக்கிறார். ஷமி, புவனேஸ்வர் குமார் ஒருநாள் மற்றும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


குல்தீப் யாதவ்

ஒருநாள் அணியில் குல்தீப் யாதவ், சாஹல் இருவரும் இடம் பெற்றுள்ளனர். உலகக்கோப்பை தொடருக்குப் பின் இப்போது தான் இருவரும் அணியில் ஒரே நேரத்தில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தீபக் சாஹர், துபே

டி20 அணியில் சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர், ஒருநாள் அணியிலும் இடம் பெற்று அசத்தி உள்ளார். சிவம் துபே வங்கதேச தொடரில் பந்துவீச்சில் ஒரே ஒரு போட்டியில் தான் முத்திரை பதித்தார். அதற்குள் அவரை ஒருநாள் அணியில் சேர்த்து வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது தேர்வுக் குழு.


சஞ்சு சாம்சன், ஷர்துல் இல்லை

சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர் கடந்த தொடரில் ஒரு டி20 போட்டியில் கூட ஆடாத நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சஞ்சு சாம்சன் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின் அணியில் இடம் பெற்றாலும், ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்காமல் அவரை நீக்கி இருக்கிறது தேர்வுக் குழு.


மீண்டும் புவனேஸ்வர் குமார்

புவனேஸ்வர் குமார் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி இருக்கிறார். வங்கதேச தொடரில் மோசமாக பந்து வீசிய கலீல் அஹ்மது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


அதே அணி தான்

டி20, ஒருநாள் போட்டிகள் என இரண்டு அணிகளிலும் ஒரு இடத்தை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் மட்டுமே இரண்டு அணிகளிலும் மாறுபடுகிறார்.


அந்த மாற்றம்

டி20 அணியில் வாஷிங்க்டன் சுந்தர் சுழற் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இருக்கும் நிலையில், ஒருநாள் அணியில் கேதார் ஜாதவ் இடம் பெற்றுள்ளார். ஜாதவ்வுக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்பதே இப்போதுள்ள நிலை.


https://tamil.mykhel.com/cricket/ind-vs-wi-india-vs-west-indies-t20-squad-and-odi-squad-announced/articlecontent-pf52376-017657.html