அதிகரிக்கும் உலக நாடுகளின் கடன்; அமெரிக்கா, சீனா பங்கு அதிகம்

Nov 16, 2019

வாஷிங்டன்:

உலக நாடுகளின் கடன், இதுவரை இல்லாத அளவாக, இந்த ஆண்டின், முதலாம் காலாண்டில் 250 டிரில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இதில், அமெரிக்கா மற்றும் சீனாவின் பங்கு அதிகம் ஆகும்.

இது தொடர்பாக சர்வதேச நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 2019 முதல் ஆறாண்டில் உலக நாடுகளின் கடன், 7.5 டிரில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதுவே முதல் காலாண்டில் 250.9 டிரில்லியன் டாலராக இருந்ததாகவும், 2019 இறுதியில் 255 டிரில்லியன் டாலராக இருக்கும். இந்த கடனில் அமெரிக்கா மற்றும் சீனாவின் பங்கு அதிகம். இரு நாடுகளின் பங்கு மட்டும் 60 சதவீதம் ஆகும். உலக மக்கள் தொகையில் ஒவ்வொருவர் மீதும் ரூ. 23 லட்சத்து 40 ஆயிரம் கடன் உள்ளது. இதில், முதல் காலாண்டில், இந்தியா பெற்ற கடன் 2.7 சதவீதம் அதாவது 1.36 லட்சம் கோடி ஆகும்.

வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பதால் கடனின் அளவு அதிகரிப்பது முக்கிய காரணமாக உள்ளது. இனி வரும் காலங்களில் வட்டி குறைய வாய்ப்பு இல்லை என்பதால், வாங்கிய கடன் திரும்ப செலுத்த உலக நாடுகள் சிரமப்படும் நிலை வரும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



https://m.dinamalar.com/detail.php?id=2412872