மீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்!

Nov 19, 2019

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் சியாச்சின் பனிமலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பில் மிக முக்கியமான பகுதியாக திகழ்வது சியாச்சின். சியாச்சினில் இருக்கும் வடக்கு க்ளாசியர் பகுதி 18,000 அடி உயரமானது. இங்கு ராணுவ வீரர்கள் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.

அதேபோல் மிக குறைந்த அளவில் இங்கு சுற்றுலா பயணிகள் செல்வதும் வழக்கம். அங்கு தற்போது மைனஸ் 30 டிகிரிக்குக் கீழே வெப்பநிலை நிலவி வருகிறது. இங்கு பலமுறை ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி பலியாகி உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம், க்ளாசியர் பகுதியில், ஏற்பட்ட பனிச்சரிவால், 10 ராணுவ வீரர்கள், உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நேற்று சியாச்சின் வடக்கு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. நேற்று திடீரென மதியம் 3 மணியளவில், பனிச்சரிவு ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்த பயணிகள் மற்றும் ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினார்கள். 4 ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் பனிச்சரிவிற்குள் சிக்கினார்கள். இவர்களை மீட்கும் பணி இரவு முழுக்க நடந்தது. இந்த நிலையில் சியாச்சின் பனிமலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலியானார்கள்.

இவர்களின் உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டது. இன்னும் இரண்டு பேரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.


https://tamil.oneindia.com/news/india/4-army-men-and-2-travelers-died-in-under-snow-due-to-avalanche-hits-in-siachen-368942.html

RELATED NEWS